புதுக்கோட்டைகுடைவரைகள்
புதுக்கோட்டைகுடைவரைகள் புதுக்கோட்டை -பொன்னமராவதி சாலையில் உள்ள வையாபுரி என்ற ஊரினை தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் பூவாலைக்குடி, இங்குள்ள ஏரியினை கடந்துதான் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும், முறையான பாதையில்லை. மழைகாலத்தில் செல்வது சிரமம்தான். காரையூர் விளக்கு வழியாகவும் இவ்வூரினை அடையலாம். கோவிலின் அமைப்பு: இக்குடைவரை கருவறை, கருவறை முன்சுவர், முகமண்டபம், பெருமண்டபம், முன்பண்டபம் என்ற கூராய் கட்டப்பட்டுள்ளது. மேலும் குடைவரையின் பக்கவாட்டில் சுமார் 3 அடி அகலமும், 2 அடி உயரம் உடைய விநாயகர் சிலையும் அகழப்பட்டுள்ளது. இவரை பூமிப்பிள்ளையார் என அழைக்கின்றனர். பெருமண்டபத்தில் அம்மன்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் குடைவரையிக்கு வெளிநீட்சியாய் உள்ளது.அம்மன் சுந்தரவல்லி என அழைக்கப்படுகிறார். மேலும், பைரவர், சண்டேசர், ஆறுமுகருக்கு தனித்தனியாய் சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை அமைப்பு: லிங்கம் தாய்ப்பாறையில் குடையப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அனைத்து குடைவரையிலும் லிங்கத்திருமேனிகள் தாய்ப்பாறையில் அமைந்தது இம்மாவட்டத்திற்கு உள்ள சிறப்பு. பெரும்பாலும் பாண்ட...